எனக்கும் ராகுலுக்கும் இதுதான் நோக்கமே! பிரியங்கா பளிச் பேச்சு

நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, ராகுல் காந்தி மற்றும் என் மனதில் இருக்கிறது என்று, பிரியங்கா காந்தி பேசினார்.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுகிறார். ஞாயிற்றுகிழமை மாலையுடன் அங்கு பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி அவரை ஆதரித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி, தற்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் வயநாட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரியங்கா பேசும் போது, காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து மாநிலங்களும் ஒன்று தான். அதை காட்டவே வயநாட்டில் ராகுல் போட்டி இடுகிறார்.

 

பழங்குடி மக்களின் கலாசாரம், வயநாடு மக்களின் கலாசாரத்தை உணர்கிறேன். பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக, மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது. பாஜக ஆட்சியில், நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே இந்திரா காந்தியின் நோக்கமே. அதே நோக்கம் தான் என் மனதிலும் என் சகோதரர் ராகுல்காந்தி மனதிலும் இருக்கிறது என்றார்.

 

இதை தொடர்ந்து, நிலம்பூர், மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரியங்கா காந்தி பேச உள்ளார். அத்துடன், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தவும் அவர் உத்தேசித்துள்ளார்.


Leave a Reply