அதிமுக அரசுக்கு காத்திருக்கும் பேராபத்து! ஆட்சியை தக்க வைக்க கிடைக்குமா ‘பத்து”?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக மே தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம், அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது, அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ற்படுத்தியுள்ளது.

 

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 136 இடங்களில் வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்தது. ஜெயலலிதா திடீர் மறைவுக்கு பின் அ.தி.மு.க. சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக  குறைய தொடங்கியது.

 

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றதும்,  அவரது அணிக்கு தாவிய 18  அ.தி.மு.க. – எம்எல்ஏக்கள் களமிறங்க்க் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் கருணாநிதி, போஸ்ஆகியோரின் மறைவால் திருவாரூர், திருப்பரங்குன்றம்  தொகுதிகள் காலியாகின. குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்து, ஓசூர் தொகுதியும் காலியாக உள்ளது.

 

 

இதற்கிடையே மக்களவை தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம், வழக்கு நிலுவையில் இருந்ததால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளை தவிர்த்து, 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக அறிவித்தது.

 

 

ஆனால், சூலூர் உட்பட எஞ்சிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று, அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்றது. இது எதிர்க்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும், ஆளும் கட்சியினர் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது

 

ஆளுங்கட்சியின் கவலைக்கு காரணம் இதுதான்

 

சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம், 114.  இதில் கலைச்செல்வன் (விருத்தாசலம் எம்.எல்.ஏ.), ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக மாறினர். அதேபோல் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு; தமிமுன் அன்சாரி; கருணாஸ் ஆகியோரும் அ.தி.மு.க.விற்கு எதிராகவே உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் தற்போதைய பலம் 108 என்று குறைந்துள்ளது.

 


இதனால், அதிமுக அரசு சட்டசபை தனிப்பெரும்பான்மையுடன் கவலையில்லாமல் ஆட்சியை தொடர, இன்னும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில், ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்கள் அணி மாறினாலும் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ளது.

 

தி.மு.க. கூட்டணிக்கு தற்போது 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற்றால், ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. எனவே, எப்படியும் 10 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், அதிமுக அரசு உள்ளது.

 

எப்படியும் இடைத்தேர்தல் நடகும் 22 தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம், அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள கருத்து கணிப்புகள் பலவும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதால், வெற்றி வசப்படுமா என்ற கவலை அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதற்கெல்லாம் விடை, மே 23இல் தெரியும்.


Leave a Reply