காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் திடீரென அனுமதி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை டுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன், காந்தி பேரவை அமைப்பின் தலைவராகவும் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

 

ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு ஆதரவாக பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் குமரி அனந்தனுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டது.

 

இதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


Leave a Reply