தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள 200 கிராமங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரொனா பரவாத வகையில் முன்மாதிரியாக 200 கிராமங்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அதன்படி கிராம நிர்வாகஅதிகாரி தலைமையில் வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழுவில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் குறித்து பதிவிட்டால் வீடு தேடி சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் மற்ற கிராமங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இந்த முயற்சி விரிவுபடுத்தப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.






