2 வயது பெண் குழந்தை கடத்தல் – போலீசார் தீவிர விசாரணை
பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தையை பராமரிக்க நியமிக்கப்பட்ட பெண்ணே கடத்தி சென்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சேர்ந்த சுடலை ராஜனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவருடைய மனைவி செல்வி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர்களது 2 வயது குழந்தை மகாலட்சுமியை சுடலை ராஜனும் அவரது தந்தை மாரியப்பனும் பராமரித்து உள்ளனர். இதனிடையே மகாலட்சுமியுடன் பணிக்கு சென்ற மாரியப்பன் பேத்தியை பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை அழைத்து வந்து வீட்டில் வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விளையாடிக்கொண்டிருந்த மகாலட்சுமியும் குழந்தையை பராமரிக்க அழைத்துவரப்பட்ட பெண்ணும் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் குறித்து விசாரிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் பழனி சென்றுள்ளனர்.






