--- --:--:-- --

திருச்சி மருத்துவமனையில் 2 ஆண் குழந்தைகள் விற்பனை

3

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் விற்க்கப்பட்ட சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் கோவிந்தன் அஸ்வினி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர்.

 

இதுபற்றிய தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இடைத்தரகர்கள் மூலம் வாங்கியது தெரியவந்தது. இதேபோன்று திருச்சி சர்க்கார் பாளையத்தை சேர்ந்த தர்மராஜ், ராணி தம்பதியின் ஆண் குழந்தையை உப்பிலியாபுரம் ஆர் புதுப்பட்டி சேர்ந்த குமார், சாரதா தம்பதியினர் வளர்த்து வருவது பற்றி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.

 

விசாரணையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இடைத்தரகர்கள் மூலம் குழந்தையை வாங்கியது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை வாங்கிய அசுவினி மற்றும் தர்மராஜ், ராணி தம்பதிகள் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட வேலம்மாள், சாரதா, குமார், புவனேஸ்வர், லூர்து மேரி ஆகிய எட்டு பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

தலைமறைவாக உள்ள கோவிந்தர் என்பவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள் .குழந்தையை விற்று வாங்கிய 82 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரு குழந்தைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon