--- --:--:-- --

புதுபைக் வாங்கி 2 நாட்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் பலி..!

2

டலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இரண்டே முக்கா லட்ச ரூபாய்க்கு பைக்கை வாங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில் ஆர்வக்கோளாறில் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

 

பிரசாந்த் என்ற அந்த மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த பிரஷாந்த் ஒரே மகன் என்பதால் தாய் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். மகன் கேட்கிறானே என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கொடுத்து கேடிஎம் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

 

அந்த பைக்கை நண்பர்களிடம் காண்பிப்பதற்காக தலைக்கவசம் அணியாமல் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். வளைவிலும் வேகத்தை குறைக்காமல் அவர் திரும்பியதாக கூறப்படும் நிலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Right Menu Icon