மழைநீரில் சிக்கித் தவித்த 2 தம்பிகள்.. அதிரடியாக மீட்ட மீட்புக் குழு..!
செங்கல்பட்டு அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்த இரண்டு குடும்பத்தினர் மீட்கப்பட்டனர். மகாலட்சுமி நகரில் பத்மநாபன் அவரது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையுடன் இரண்டாவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.
செங்கல்பட்டையை சேர்ந்த அலாவுதீன் மற்றும் அவரது மனைவி அதே தெருவில் மற்றொரு வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வந்துள்ளனர். அப்பகுதியில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்து வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் செங்கல்பட்டு தீயணைப்பு துறை வீரர்கள் படகுகள் மூலம் இரண்டு குடும்பத்தினரையும் மீட்டனர்.






