தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி உட்பட தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார், காவல் வீட்டுவசதி கழக தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிக்கான பணிகளை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக உள்ள தினகரன் கூடுதலாக கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஐஜியாக பணியாற்றிய ரூபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த மூர்த்தி, நெல்லை சரக டிஐஜி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, சென்னை வடக்கு சட்டம் – ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக சரோஜ்குமாரும், சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையராக ராதிகாவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சமூக நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான டிஜிபி அலுவலக ஐஜியாக மகேந்திர குமார் ரதோட் நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சரக டிஜஐியாக இருந்த அபினவ் குமார், ராமநாதபுரம் சரக டிஜஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, வேலூர் சரக டிஐஜியாக தேவராணியை நியமித்து கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.





