14 வயது சிறுமிக்கு 3 சிறுவர்கள் அளித்த பாலியல் வன்கொடுமை..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
எட்டாம் வகுப்பு பயிலும் அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்ற போது அந்த தோழியின் அண்ணன் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறி உள்ளான். இதனை தனது நண்பர்களிடம் அவன் தெரிவிக்க அவர்களும் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கர்ப்பம் தரித்த சிறுமிக்கு ஆண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 17 வயது கொண்ட மூன்று சிறுவர்களையும் இந்த குற்றத்தை மறைத்ததற்காக அதில் ஒருவனது பெற்றோரையும் போக்சோவில் கைது செய்தனர்.







