--- --:--:-- --

பாஜகவில் இணைந்த 14 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்..!

1

க்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் தேர்தல் அறிக்கைக்குழு மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்டு வருகிறது.

 

அதேபோல அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழுவும் மக்களைச் சந்திக்கும் பணியில் இறங்கியுள்ளது. கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாமக, தேமுதிக, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜகவும் தயாராகி வருகிறது.

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து விலகி மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Right Menu Icon