பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மயக்கம்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அறந்தாங்கியை சேர்ந்த சித்திரவேல் என்பவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்பொழுது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு அறந்தாங்கியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட தொழிலாளர்கள் 11 பேர் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரியாணி உண்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





