--- --:--:-- --

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை! மே 3ல் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? தேர்வுத்துறை சுற்றறிக்கை!

students 03

சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை, பிப்ரவரி 17ம் தேதி வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு, மே மாதம் 3ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது; மே மாதம் 21ம் தேதி, தேர்வுகள் நிறைவடைகின்றன.

 

இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதாவது பிளஸ் 2 தேர்வு தொடங்குவதற்கு ஒருநாள் முன்புதான் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்குமாக என கேள்விகள் எழுந்து வந்தன.

 

இந்த குழப்பங்களுக்கு மத்தியில், மாநில தேர்வுகள் துறையானது, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பொதுத்தேர்வும் நடைபெறவில்லை. தேர்வுக்கும் வாக்கு எண்ணிக்கையும் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி மே 3ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon