--- --:--:-- --

இன்று நடைபெறும் 11வது மெகா தடுப்பூசி முகாம்..!

4

மிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் பதினோராவது மகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இதுவரை 6.73கோடி பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக வாரத்தின் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து முகாம்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

 

இதில் 11 வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 மையங்களில் இன்று நடைபெறுகிறது. தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon