--- --:--:-- --

காதல் பிரச்சனை காரணமாக 11 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

2.1

சிவகங்கையில் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததற்கு காதல் பிரச்சினையை காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவபுரி பட்டியை சேர்ந்த 11 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

 

இந்த விசாரணையில் மாணவி 16 வயது மாணவனை காதலிப்பதும் இதனை அறிந்த பெற்றோர் மாணவியைத் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவனுக்கும் மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்படவே மாணவியை அந்த மாணவன் அடித்ததாக கூறப்படுகிறது.

 

இதில் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மாயமான அந்த மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon