பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு பகுதியான செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் நேற்று 32 ஆயிரத்து 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாளையுடன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைய உள்ளது. இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் ஒரு பகுதியான செய்முறை தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி இருந்த நிலையில் அந்தத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வரும் போது தேர்வுகளை நடத்த அந்த மாநில தேர்வு துறை முடிவு செய்துள்ளது.







