தமிழகத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்!
துபாய் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என துபாய் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அங்குள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழகத்தின் அழைப்பை ஏற்று சென்னை வந்த துபாய் முதலீட்டாளர்கள் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் வந்தபோது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறினார்.
தமிழகத்தில் அதிக அளவு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று கூறிய துபாய் முதலீட்டாளர்கள் பயோடீசல், கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட நான்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.





