10 அடி குழிக்குள் தவறி விழுந்த குழந்தை! துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்கள்
விழுப்புரம் அருகே 10 அடி ஆழம் கொண்ட குறுகலான அஸ்திவார குழிக்குள் விழுந்த 4 வயது சிறுமியை இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். கண்டமங்களம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில் சரோஜா என்பவர் வீடு கட்டுவதற்காக ஒரு அடி சுற்றளவு அஸ்திவார குழிகளைத் தோண்ட வந்திருந்தார்.
வீடுகட்ட தாமதமானதால் வந்த குழிகளை மூடாமல் அப்படியே விட்டுவிட்டார். இந்நிலையில் அஸ்திவாரக் குழி அருகே விளையாடிய பாஸ்கர் என்பவரின் 4 வயது மகள் ரோகிணி அந்த குழிக்குள் தவறி விழுந்தார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட இளைஞர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

எனினும் அவர்கள் வரும் வரை காத்திராமல் களமிறங்கி அப்பகுதி இளைஞர்கள் பொக்லைன் உதவியுடன் அந்த குறுகிய பள்ளம் வெட்டி சிறிது நேரத்திலேயே சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






