--- --:--:-- --

யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய யாசகர்

7

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.

 

இந்த நிலையில்தான் யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வினயிடம் பாண்டியன் வழங்கினார். இதுவரை அவர் 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon