அதிசய மஞ்சள் நிற நாகம்..! ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்..!
கடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்த மஞ்சள் நிற அதிசய பாம்பை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிவசக்தி நகரை சேர்ந்த உத்திராபதி என்பவரின் வீட்டிற்கு பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக தகவலறிந்து வந்த பாம்பு ஆர்வலர் செல்லா பாம்பை மீட்டபோது அதிசய மஞ்சள் நிறம் என்பது தெரியவந்தது.
அதிசயமாக கண்ட அப்பகுதி மக்கள் தெய்வமாக கருதி வீட்டு வாசலிலேயே வைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டு வழி எழுதி வைத்தனர்.






