பேருந்தில் பர்தா அணிந்து திருட முயன்ற பெண்கள்..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் பர்தா அணிந்தபடி மூன்று பெண்கள் நடமாடியதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்தவர்களை கண்காணித்த சிலர் அவர்கள் மூதாட்டியிடம் இருந்து நகை பறிக்க முயன்றதை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களை பிடிக்க முற்பட்ட பொழுது ஒருவர் தப்பி சென்ற நிலையில் இரண்டு பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர். இதனையடுத்து இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





