மாஸ்க் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!
சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.கொரொனா பரவலை கட்டுப்படுத்த நான்கு மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொது முடக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் ,பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.






