--- --:--:-- --

2026க்குள் தங்கம் விலை குறையுமா?

2

ங்கம் என்பது நகையாக மட்டுமல்லாமல் சேமிப்பின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் தான் தங்கத்தை பெரிய சொத்தாக நினைத்து, பாரம்பரியமாக பெண்களுக்கு நகையை கொடுத்து புகுந்த வீட்டிற்கு அனுப்புகின்றனர்.

 

அப்படிப்பட்ட தங்கம் சமீப காலமாகவே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாதா என்ற நிலைக்கு நகை விலை சென்று கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் டபுள் மடங்காக தங்கம் விலை உயர்ந்தது குறிப்பிட்டத்தக்கது.

 

இந்த நிலையில் பிறந்துள்ள 2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும். குறைவதற்கு ஏதாவது வாய்ப்புண்டா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இது குறித்து பேசிய, சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ஒன்றரை லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்புள்ளதாக தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon