மேடம் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – குஷ்புவிடம் கூறிய மாணவர்
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது குஷ்புவை நோக்கி மாணவர் ஒருவர் மேடம் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என உரக்க கத்தி குறும்புத்தனமாக கோரிக்கை வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு ஏன் தம்பி ஏன் என சிரித்துக்கொண்டே கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க தம்பி கொரொனா காலகட்டத்தில் ஏற்கனவே பல மாதங்கள் ஓய்வு எடுத்து விட்டோம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அதற்கு அந்த மாணவன் பள்ளி மாணவர்கள் மட்டும் தேர்வுகள் ஏதும் இல்லாமல் ஜாலியாக இருப்பதாகவும் கல்லூரி மாணவர்கள் ஆகிய தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து டார்ச்சர் செய்வதாகவும் அதனால் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சுதாரித்துக்கொண்ட குஷ்பு நீங்கள் எந்த கல்லூரி மாணவர் என்று கேட்டபோது அதை மட்டும்தான் கூற மாட்டேன் என நழுவியதால் கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.






