--- --:--:-- --

கணவனை கொன்ற மனைவி..!பழியை மகள் மீது போட்ட தாய்..!

16

எடப்பாடி அருகே உள்ள தென்பொதிகை வளைவுப் பகுதியை சேர்ந்தவர் படவெட்டி இவருக்கு நளா என்கிற மனைவியும் 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நளா குழந்தைகளுடன் ஜலகண்டாபுரம் அடுத்த ஆவடத்தூர் ராஜா கோவில் வளவு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

 

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு படவெட்டி மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் அவர் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவர் படவெட்டி தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் மகள் அவரது தலையில் குழவிக் கல்லை போட்டு மகன் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

இதைத்தொடர்ந்து நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை கொன்றதாக மகளும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இதில் போலீசாருக்கு சந்தேகம் எழவே நளா குடும்பத்தாரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு தாயும் மகளும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

 

விசாரணையை இறுக்கியதில் நளாக்கும் அவரது கள்ளக்காதலன் ரங்கசாமி என்பவரும் சேர்ந்து தான் வெட்டிக் கொலை செய்தனர் என்பது தெரியவந்தது. மேலும் பாலியல் தொல்லையளித்த தாய், தந்தையை கொன்றதாக கூறி பழியை ஏற்றுக் கொண்ட கருணை மற்றும் தற்காப்பு அடிப்படையில் விடுதலை செய்து விடுவார்கள் என கூறி பெற்ற தாயே சிறுமியை மூளை சலவை செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்தது அம்பலமானது.

 

இதையடுத்து சிறுமியை விடுவித்த போலீசார் உடனடியாக செயல்பட்டு ரங்கசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக நளாவின் அக்காள் மகளை திருமணம் செய்துள்ள அவர் தான் இந்த ரங்கசாமி என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon