--- --:--:-- --

ஆண்நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி..!

2

கோவை அருகே கணவன் கொலை வழக்கில் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர். கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா – ரீனா தம்பதியினருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை எனில் கடந்த 22ஆம் தேதி தனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராஜாவின் சகோதரிக்கு ரீனா தகவல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்யவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் குடும்ப உறவினரான சதீஷ் என்பவருடன் ரீனாக்கு கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளதும், கணவருக்கு இது தெரிய வந்ததால் இருவரும் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon