திருமணமான 7 மாதங்களில் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!
கும்பகோணத்தை சேர்ந்த சரவணன் மற்றும் அபிநயாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அபிநயா தனது கணவர் வீட்டில் வசித்து நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் சரவணன் அபிநயாவின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.
அபிநயாவின் பெற்றோர் கும்பகோணத்திற்கு வந்து பார்த்த பொழுது அபிநயா மருத்துவமனைக்கு வரும் போது இறந்து விட்டதாகவும் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக பிணவறையில் வைத்திருப்பதாக மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுத பெற்றோர் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கும்பகோணம் காவல்நிலையத்தில் அவரது தந்தை ராமச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் அபிநயாவின் கணவர் சரவணன் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது தொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்னும் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் இந்த மரணம் குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





