ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? – மு.க.ஸ்டாலின்
சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளை கண்டு மத்திய பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில், அவையின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், தெளிவை வழங்கவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர்களின் ஜனநாயக உரிமையான, முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசும் உரிமை மீண்டும் வழங்கப்படுமாறு, அந்த இடைநீக்கம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




