--- --:--:-- --

சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில் கண்ணாடிகளை உடைத்தது யார்..?

3

நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகே சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கண்ணாடிகளை உடைத்தது யானைகள் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கோடநாடு செல்லும் வழியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அலுவலக கண்ணாடிகள் கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்து கிடந்ததாக எஸ்.டி நிர்வாகம் சார்பில் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து அங்கு விசாரணை மேற்கொண்ட காவல் உதவியாளர் வேலுச்சாமி உள்ளிட்ட காவலர்கள் அந்த பகுதியில் இருந்த கால் தடம் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

அப்பொழுது அங்கு யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அலுவலக கண்ணாடிகளை உடைத்தது யானைகளாக இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon