--- --:--:-- --

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..?

3

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் அது பரவுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon