தமிழகத்தில் இன்று கனமழை எங்கெங்கே?
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. பூதப்பாண்டி, சுசீந்திரம், சுங்கான்கடை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் பெய்த மழை மண்ணை குளிர்வித்தது.
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், வடகரை, செங்குளம், கரிசல்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.கரூரில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றதை காண முடிந்தது. கோவை மாவட்டம் பேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பச்சாபாளையம், திதிபாளையம், காளாம்பாளையம், மாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பொழிந்தது.






