தஞ்சாவூரில் வீலிங் செய்த புள்ளிங்கோ..போலீசார் வலை வீச்சு..!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் வீடியோ வைரலான நிலையில், சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மகாமக குளக்கரையில் வீலிங் செய்த சிறுவர்கள் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வந்த சூழலில் புறவழிச் சாலையில் சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாகியுள்ள சிறுவர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.






