இரவில் சிறிது நேரம் செயலிழந்த வாட்ஸ் ஆப் சேவை..!
இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு வாட்ஸ்அப் செயலி சிறிதுநேரம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி சேவை நேற்று திடீரென செயல்படாமல் போனது. இரவு 9 மணி அளவில் அந்த நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது.
குறிப்பாக இந்தியாவில் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால் அதனை பயன்படுத்துவோர் தவித்தனர். வாட்ஸ்அப் செயலி பிரச்சினைகள் குறித்து டுவிட்டரில் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். பின்னர் சேவை சிக்கலில் இருப்பதை ஒத்துக் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் பிரச்சினைகளை சரி செய்து விட்டதாகவும் இதுவரை பொறுமை காத்ததற்காக பயனர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நேரத்தில் சேட் செய்ய முடியாமலும் வீடியோ கால் பேச முடியாமல் பலரும் தவித்தனர்.






