தமிழகத்தில் இன்று வெப்பநிலை எப்படி? – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 23ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு என்றும்,வெப்ப நிலை இயல்பு நிலையை ஒட்டியே இருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





