மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 76.97% நீர் இருப்பு உள்ளது. 5முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 9.050 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 2,900 கன அடியில் இருந்து 4,120 கன அடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றுக்கு 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.
தொடர் மழையால் தமிழ்நாடு முழுவதும் 15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென் பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வீடூர் அணையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, 9 மதகுகளின் வழியாக 4,410 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 3,196 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.





