அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை..!
குட்கா விற்பனை செய்த 20,000 கடைகளுக்கு சீல் வைத்து, 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்துள்ளது. கடைகளில் குட்கா பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.
இதனையடுத்து, கூல் லிப் உள்ளிட்ட போதைப்பொருள்களை நாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து அறிக்கை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






