கோதுமையில் கண்டுப்பிடிக்க பட்ட வைரஸ்..!
இந்தியாவிலிருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்ட கோதுமையில் ரூபெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதால் அந்நாட்டு கோதுமையை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கோதுமை விலை 20 சதவீதம் அதிகரித்தால் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அறிவித்தது.
முன்னாள் ஒப்பந்தம் செய்யப்பட்ட சரக்குகளை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டிற்கு கோதுமை அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே இந்திய கோதுமையை துருக்கி திருப்பி அனுப்பியுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமையை திரும்ப பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.





