--- --:--:-- --

டைட்டில் ஜெயித்த அஸீமை ஒரே வார்த்தையில் தாக்கிய விக்ரமன்!

11

பிக் பாஸ் 6ம் சீசன் finale கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதில் பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்த நிலையில் இறுதியில் அஸீம் கையை உயர்த்தி அவர் வெற்றி பெற்றதாக கமல் அறிவித்தார்.

 

ஆனால் அதன் பின் நெட்டிசன்கள் பலரும் இந்த முடிவுக்காக விஜய் டிவியை ட்ரோல் செய்தனர். விக்ரமனுக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்திய அசீமை எப்படி வெற்றியாளராக அறிவித்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

 

இருப்பினும் அஸீம் தவறு செய்தாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது, வாக்குகள் அதிகம் கிடைத்ததால் தான் அவர் ஜெயித்தார் என அவருக்கு ஆதரவாகவும் பலரும் பேசினார்கள்.

 

இந்நிலையில் விக்ரமன் இன்று லைவ்-வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அசீம் பற்றி கேட்ட கேள்விக்கு “விளம்பரத்திற்காக இப்படி பண்ணிட்டாரு.. பாவம்” என கூறி இருக்கிறார்.

 

மேலும் அஸீம் தனது பரிசு தொகையில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதாக அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். டைட்டில் ஜெயித்த அஸீமை ஒரே வார்த்தையில் தாக்கிய விக்ரமன்!

Right Menu Icon