மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்ட விஜய்
வருமான வரித்துறை விசாரணை முடிவடைந்ததை அடுத்து நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் விஜய் இன்று மீண்டும் கலந்து கொண்டார். கடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள நெய்வேலி என்எல்சி ஆலை இரண்டாம் சுரங்கத்தில் படத்தின் சண்டை காட்சி படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
அங்கு கடந்த புதன்கிழமை சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யை விசாரணைக்காக சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எனினும் நடிகை ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி உள்ளிட்டோரை வைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் இன்று காலை கலந்துகொண்டார்.






