இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் 96 திரைப்படம்..!
96 திரைப்படம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவம், காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்து இருந்தார்கள். 96 படத்தின் ஹிந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.






