பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த விஜய் – அறிவிப்பு
பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர். இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பெரம்பலூர் மக்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






