புடவையை கட்டிக் கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ வைரல்..!
தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பரூக் அரோரா ஒரு புடவையை கட்டிக் கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
டெல்லியை சேர்ந்த வரும் அரோரா அடிக்கடி ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அவர் புடவையை கட்டிக் கொண்டு மூன்று முறை டைவடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் பதிவிட்டிருந்தார்.






