நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..!
நடிகர் சிம்பு திரைப்படத்தில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் தனது நடனத்தின் மூலம் உள்ளங்களைக் கவர்ந்தவர். இந்த நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் அவர் அதிக எடை போட்டு இருந்தது அவரது இமேஜை டேமேஜ் செய்தது.
கிட்டத்தட்ட 105 கிலோ வரை எடை கூடியுள்ளார். இதனால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளான சினிமா ரசிகர்கள் சிம்பு தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சென்று 105 கிலோவாக இருந்த தனது எடையை கடின உடற்பயிற்சியை செய்து 60 கிலோவாக குறைத்து பிட்டாக மாறியுள்ளார்.
தற்பொழுது அவர் எடை குறைக்கும் போது எடுத்த உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரல் ஆகியுள்ளது.






