--- --:--:-- --

ஆக.6-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்..!

1.1

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜூலை 5-ஆம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும்.

 

ஜூலை 20ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெற ஜூலை 22ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

Right Menu Icon