வைத்திலிங்கத்தின் சொத்துகள் முடக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கியது.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடைபெற்றது.
அதன் அடிப்படையில் சுமார் ₹101 கோடி மதிப்பிலான, 2 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது.இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





