அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன், அவரது மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு நாளை செல்லும் துணை முதல்வர், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். வரும் 10ஆம் தேதி சர்வதேச சமுதாய ஆஸ்கார் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.
வாஷிங்டன் டிசி, ஹுஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ். பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 17ஆம் தேதி ஓ.பி.எஸ். தமிழகம் திரும்புகிறார்.
அமெரிக்காவுக்கு புறப்படும் முன்பு, கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓ.பி.எஸ். வீட்டிற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல், விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. அதிமுக தொண்டர்கள் திரளாக கூடி, துணை முதல்வரை வழி அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




