மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் உதயநிதி..!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து தனது குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாகவும் தனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு வழங்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணி வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி பாப்பாத்திக்கு இன்று பணி நியமன ஆணையை உதயநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






