விருதுநகர் மாவட்டத்தில் இன்று உதயநிதி கள ஆய்வு..!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11 மணிக்கு சாத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.
பின்னர் அரசு மருத்துக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மாலை 5 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.






