இரு இளைஞர்கள் கொலை.. நாட்டு வைத்தியரின் வாக்குமூலம்.
கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற ஊரில் இரு இளைஞர்களை கொல்ல நாட்டு வைத்தியர் பயன்படுத்திய ஆயுதங்களை காவல்துறையினர் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழவரம் பகுதியில் இன்று நாட்டு வைத்தியர் இரு இளைஞர்களை கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் குறித்து கேசவமூர்த்தி அளித்த வாக்குமூலத்தை செய்து குறிப்பாக காவல்துறை வெளியிட்டுள்ளது.
தன்னுடன் ஓரினச்சேர்க்கை தொடர்பில் இருந்த அசோக் ராஜன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் ஆத்திரமடைந்து அவரை கொன்றதாக கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேபோல தன்னுடன் தொடர்புடைய முகமது என்ற இளைஞரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்ததால் கோபத்தில் அவரையும் கொன்றதாக மூர்த்தி கூறினார்.
இருவரையும் கொன்று வீட்டிற்குள் எரித்த நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆடு வெட்டும் கத்திகள், மருத்துவர் பயன்படுத்தும் கத்தரிக்கோல், கையுறை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
.!






