வெள்ளநீரில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்ற வீடு திரும்பிய இளைஞர்கள் கனமழை வெள்ளத்தில் நோக்கி 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முத்துலிங்கம் மற்றும் டேவிட்சன் ஆகிய இருவரும் கடந்த 18ம் தேதி மதுரையில் ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சென்று விட்டு வீடு திரும்பியிருக்கின்றனர். அப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் தரைப்பாலத்தில் பேருந்து செல்ல முடியாமல் வெள்ளநீரை சிக்கியது.
இதனையடுத்து இளைஞர்கள் இருவரும் பேருந்தை நிறுத்தி இறங்கி வெள்ள நீரில் கரை திரும்ப முயற்சித்த பொழுது இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஏழு நாட்களாகியும் இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் வெள்ளகோவில் அருகே இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.





